
போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் துவங்கி உள்ளது. நேற்று நிகழ்ச்சிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாய் நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாரை தனது வீட்டுக்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.