போபால் :மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜித்தேந்திரா என்ற சுகாதார பணியாளர் 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
