புதுடெல்லி:கடந்த 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர், மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிவர். உச்ச நீதிமன்றத்தின் 3வது மூத்த நீதிபதியாக இருந்த இவர், நேற்று ஓய்வு பெற்றார். தமிழகம் சம்பந்தப்பட்ட காவிரி, மேகதாது அணை, முல்லைப் பெரியாறு, சாத்தான் குளம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கூடங்குளம் விவகாரம், 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய வழக்குகளை விசாரித்தவர். இவர் தலைமையிலான அமர்வு விசாரித்த தமிழகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் புதிய அமர்வில் பட்டியலிடப்படும் என தெரிகிறது.
