தெலங்கானாவின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு – ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும்போது திடீரென கம்பி அறுந்து விழுந்தது.