826 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீடு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் QR குறியீட்டை நடைமுறைப்படுத்தக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது.

அவற்றில் 713 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன.

நேற்றைய (28) தினம் 536 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. அதன் ஊடாக 1,87,005 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

அத்துடன், நேற்று மாத்திரம் 1,63,544 பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். நேற்று இரவு 8:30 மணியளவில் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 44,,79,376.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.