பெரும் நம்பிக்கை.. அமெரிக்காவை களம் காணும் வியட்நாம் நிறுவனம்..!

எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என அனைத்து நாடுகளும் நம்பும் நிலையில் வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரையில் இத்துறையில் எப்படியாவது வர்த்தகத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவரமாக உள்ளனர்.

அந்த வகையில் வியட்நாம்-ல் கொடிகட்டிப் பறக்கும் ஒரு நிறுவனம் தற்போது அமெரிக்காவிற்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுக் களத்தில் இறங்கியுள்ளது.

அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் தலைகள் பல இருக்கும் வேளையில் குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பிரிவில் கடையை விரிக்க உள்ளது வியட்நாம் நாட்டின் VinFast.

இந்தியா-வின் மாஸ்டர் பிளான்.. ரஷ்யா வியப்பு.. செம ஐடியா..!

வியட்நாம்

வியட்நாம்

வியட்நாம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட வின்ஃபாஸ்ட் என்னும் எலக்ட்ரிக் கார் நிறுவனம், டெஸ்லா, போர்டு போன்ற முன்னணி ஆட்டோமொபைல் ஜாம்பவான்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையில் அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

வின்ஃபாஸ்ட்

வின்ஃபாஸ்ட்

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் நிறுவனரான Pham Nhat Vuong ராமன் நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனையில் தனது முதல் பில்லியன் டாலரை ஈட்டினார். இந்த ராமன் நூடுல்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்த பின்னர் வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான Vingroup இன் உரிமையாளரானார்.

ராமன் நூடுல்ஸ்
 

ராமன் நூடுல்ஸ்

2021 ஆம் ஆண்டில் சுமார் வின்குரூப் சுமார் 5.4 பில்லியன் டாலர் அளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இக்குழுமம் ராமன் நூடுல்ஸ் மட்டும் அல்லாமல் ஷாப்பிங் சென்டர்கள், கோல்ஃப் மைதானங்கள், வீட்டு மேம்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகங்களை வைத்திருக்கிறது. வின்குரூப் வியட்நாமின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்-யும் அறிமுகம் செய்துள்ளது.

Pham Nhat Vuong

Pham Nhat Vuong

Pham Nhat Vuong சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்த நிலையில் தனது கவனத்தை ஆட்டோமொபைல் பக்கம் திருப்பினார். இதன் அடிப்படையில் தான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டு எலக்ட்ரிக் கார்களை உலகத் தரத்திற்குத் தயாரித்து விற்பனையில் வெற்றியை நாட்டியுள்ளது.

வியட்நாம் பொருளாதாரம்

வியட்நாம் பொருளாதாரம்

“உலக அரங்கில் வியட்நாமை பொருளாதார ரீதியாக உயர்த்துவதே Pham Nhat Vuong குறிக்கோள்” என்று உலகளாவிய வாகன முன்னறிவிப்பின் துணைத் தலைவர் சாம் பியோரானி கூறினார். “அந்த நிலையை அடைய விரும்பும் பெரும்பாலான நாடுகள் சொந்தமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களை வைத்துள்ளது, என்பதையும் சாம் பியோரானி தெரிவித்துள்ளார்.

கூட்டணி.. அமெரிக்கக் கனவு..

கூட்டணி.. அமெரிக்கக் கனவு..

வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டாலும், தற்போது BMW போன்ற பன்னாட்டு பிராண்டுகளின் ஊழியர்களை வைத்து இயங்கி வருகிறது. மேலும் ZF, Gotion மற்றும் Pininfarina போன்ற உதிரிப்பாகங்கள் விநியோக கூட்டாமை கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை அமெரிக்கச் சந்தை வரவேற்குமா..?

ஜெர்மனி-யை புலம்பவிட்ட ரஷ்யா.. எரிவாயு வைத்து கேம் ஆடும் விளாடிமிர் புதின்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vietnam carmaker VinFast entering USA to beat Tesla; Vingroup Pham Nhat Vuong’s Big Dream

Vietnam carmaker VinFast entering USA to beat Tesla; Vingroup Pham Nhat Vuong’s Big Dream பெரும் நம்பிக்கை.. அமெரிக்காவைக் களம் காணும் வியட்நாம் நிறுவனம்..!

Story first published: Friday, July 29, 2022, 20:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.