பாகிஸ்தான், ரஷ்யாவில் குறைந்து வரும் சீன முதலீடு.. டிராகன் தேசத்தில் என்ன தான் நடக்குது?

சீனாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் சீனா வங்கிகள் பல பில்லியன் டாலர் இழப்பினை காணலாம். இதனால் சீன பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில் சீனாவின் முதலீடானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் மூலம் செய்யும் முதலீடானது நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஜீரோவாக சரிந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் சீனாவின் செலவுகள் 56% குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா பொருளாதாரத்தினை பதம் பார்க்க கூடிய 5 முக்கிய காரணிகள்.. என்னென்ன தெரியுமா?

ரஷ்யா  - பாகிஸ்தானுக்கு பிரச்சனை

ரஷ்யா – பாகிஸ்தானுக்கு பிரச்சனை

சீனாவினால் அதிக பயன்பெறும் நாடுகளான ரஷ்யா மற்றும் பாகிஸ்தான், இதனால் பெரும் பிரச்சனையை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்கோ கடந்த 2021ல் ஆண்டில் மட்டும் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதே இஸ்லாமாபாத் 62 பில்லியன் உள்கட்டமைப்பு திட்டத்தினையும் கொண்டுள்ளது.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

ஆனால் மாறி வரும் சீனாவின் போக்கினால் இவ்விரு நாடுகளிலும் முதலீடுகள் குறையலாம். சீனாவின் நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியின் மூலம் இப்போது கடன் பிரச்சனையில் பல நாடுகளும் சிக்கித் தவித்து வருகின்றன.

பெல்ட் ரோடு திட்டம்
 

பெல்ட் ரோடு திட்டம்

பெல்ட் ரோடு மற்றும் முதலீட்டு திட்டம் மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வரும் சீனாவின் செலவானது, தொடர்ந்து குறைந்து வருகின்றது. 2022ல் 147 பிஆர்ஐ நாடுகளில் மொத்தமாக 28.4 பில்லியன் டாலர் முதலீட்டினை பல நாடுகளும் பெற வேண்டும் என தரவுகள் காட்டுகின்றன. இதே கடந்த ஆண்டில் 29.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்த பிஆர்ஐ திட்டம் 2013ல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

வளர்ச்சி எப்படியிருக்கும்?

வளர்ச்சி எப்படியிருக்கும்?

இந்த திட்டத்தின் மூலம் சீனா மிகப்பெரிய வளர்ச்சி கடன் ஆதாரமாக மாற உதவியது. இந்த திட்டத்தினை எதிர்காலத்தில் பெய்ஜிங் எப்படி எதிர்காலத்தில் செயல்படுத்துகிறது என்பதை பொறுத்து இந்த திட்டத்தின் வளர்ச்சி இருக்கலாம்.

சீனாவின் பிரச்சனை

சீனாவின் பிரச்சனை

சீனாவின் வளர்ச்சி விகிதமானது கொரோனா, பணவீக்கம், சப்ளை சங்கியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ஜீரோ கோவிட் பாலிசி, தற்போது ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் நெருக்கடி, பொருளாதார வளர்ச்சி சரிவு உள்ளிட்ட பலவும் சீனாவுக்கு எதிராக உள்ள நிலையில், சீனாவிலேயே முதலீடுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சீன உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s investments in Russia, Pakistan may decrease

China’s investments in Russia, Pakistan may decrease/பாகிஸ்தான், ரஷ்யாவில் குறைந்து வரும் சீன முதலீடு.. டிராகன் தேசத்தில் என்ன தான் நடக்குது?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.