கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இம்மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி கருக்கலைப்பு செய்த கூவாடு கிராமத்தைச் சேர்ந்த பெரியநாயகி என்ற பெண் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் கருக்கலைப்பு செய்வதற்கு முறையான சான்றிதழ் வாங்காமல் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தது அம்பலமானது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.