வவுனியா மாவட்டத்தில் இம்முறை 12,000 ஏக்கர்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரதேசங்களில் பழங்கால முறைப்படி சிறுபோக நெல் அறுவடை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாடு சூழ்நிலையிலும் காலதாமதமின்றி இம்முறைப்படி அறுவடை மேற்கொள்வதால் பயிர்கள் சேதமாவதை தடுக்கக்கூடியதாக உள்ளதென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.