அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் – நள்ளிரவு முதல் நடைமுறை

இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.

அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1. காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> பொலிஸாரின் எச்சரிக்கையும் மீறி தொடரவுள்ள போராட்டம் – கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம்

2. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவியை பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு வழங்குமாறு அரசாங்கத்தின் சிரேஷ்டர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> முக்கிய அமைச்சு பதவி தொடர்பில் ரணிலுக்கு அழுத்தம் – பின்னணியில் காய்நகர்த்தும் சம்பிக்க

3. காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சார்பில் கறுப்பு தொப்பி (Black Cap Movement) அமைப்பு ஜனாதிபதியிடம் நல்லிணக்க செயற்பாட்டை கோரியுள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> ஜனாதிபதியிடம் நல்லிணக்கத்தை கோரும் போராட்டகாரர்களின் அமைப்பு

4. தனக்கு எதிராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்குபதிவின் போது தனக்கு எதிராக வாக்களித்தவர்களை பதவிகளிலிருந்து அகற்ற ரணில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> ரணிலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் – கதிகலங்கும் மகிந்த கட்சியினர்

5. கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியிலுள்ள ஆர்ப்பாட்டக்களத்தில் மீண்டும் இன்றைய தினம் குழப்பநிலையொன்று பதிவாகியுள்ளது.

கொழும்பு கோட்டை பொலிஸார் இன்று பகல் அப்பகுதிக்கு வந்து, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கூடாரங்கள் நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு முன்னதாக அகற்றப்பட வேண்டும் என்ற அறிவித்தலை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> காலிமுகத்திடல் பகுதிக்கு வந்து மீண்டும் விசேட அறிவிப்பை வழங்கிய பொலிஸார்! இன்றும் குழப்ப நிலை

6. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> ஜோசப் ஸ்டாலின் கைது நடவடிக்கையின் எதிரொலி! கொழும்பின் முக்கிய பகுதியில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

7. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> பேருந்து கட்டணம் குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை

8. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருட காலத்துக்கு விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> இலங்கை கடற்பரப்பில் நீண்ட காலம் தரித்து நின்ற கப்பலுக்கு செலுத்தப்பட்ட பணம்! எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

9. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368. 54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 357.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

10. கொழும்பின் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றில் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த ஆட்டம் ஆரம்பம்! கொழும்பில் வன்முறை வெடிக்கும் அபாயம் - நள்ளிரவு முதல் நடைமுறை | Srilanka Political News Tamilwin

மேலும் படிக்க >>> கொழும்பின் புறநகர் பகுதியில் பரபரப்பு – நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.