சத்துணவு திட்டம் உருவானது எப்படி..? முதலில் அறிமுகம் செய்தது யார்..?

நம்மில் பல பேர் சத்துணவு சாப்பிட்டு தான் பள்ளி படிப்பினை படித்திருப்போம். ஏன் இது தான் பலரை பள்ளி படிப்படிக்கு முடிக்கவே வழிவகுத்தது என்றால் அது மிகையாது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இந்த ஒரு வேளை சாப்பாடாவது நிம்மதியாக சாப்பிடட்டும் என்று அனுப்பி வைத்த பெற்றோர்கள் பலர்.

இந்த சத்துணவு திட்டமானது தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ரால் 1982ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டமானது ஆரம்பத்தில் வறுமையினால் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்காமல் தவித்து வந்த குடும்பங்களுக்கு, பெரும் உதவிகரமாக இருக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.

இந்தியா-வை முந்திய பங்களாதேஷ் நிலைமை இப்போ என்ன தெரியுமா..? 3 மாதம் மட்டுமே..!

 முழுமையாக செயல்படுத்தியது?

முழுமையாக செயல்படுத்தியது?

இதே மதிய உணவு திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தியவர் காமராஜர் தான். எனினும் இவர்களுக்கு முன்பே சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1925ம் ஆண்டு இந்த திட்டத்தினை சிங்காரவேலர் அறிமுகப்படுத்தினார். 1920ல் பிட்டி தியாகராயர் காலத்தில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அவர் கொண்டு வந்ததே இந்தியாவின் முதல் மதிய உணவு திட்டம் என்ற கருத்தும் உண்டு. அதன் பின்னர் தான் எம்ஜிஆரால் சத்துணவு திட்டம் எனவும், காமராஜரால் மதிய உணவு திட்டம் எனவும் கொண்டு வரப்பட்டது.

முக ஸ்டாலின் ஆட்சியில்?

முக ஸ்டாலின் ஆட்சியில்?

இது கருணாநிதி ஆட்சி காலத்தில் முட்டையும் சேர்த்து வழங்கப்பட்டது., அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கலவை சாதமாகவும் மாற்றப்பட்டது. அதன்பிறகு நடப்பு ஆண்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காலை உணவினையும் சேர்த்துள்ளார். மொத்தத்தில் அனைத்து ஆட்சியாளர்களும் மாணவர்களின் பசியினை போக்க கொண்டு வரப்பட்ட திட்டங்களாக இருந்து வருகின்றன.

கல்வித் தரம்  மேம்படும்
 

கல்வித் தரம் மேம்படும்

இதனால் மாணவர்களில் ஊட்டசத்தும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கான கல்வித் தரத்தையும் மேம்படுத்த முடியும் என அரசு நினைத்தது. அதோடு மாணவர்கள் இடை நிறுத்தலையும் இதன் மூலம் குறைக்க முடியும் என அரசு நினைத்தது. இதனை செயலிலும் வெற்றிகரமாக பல வருடங்களாக நிரூபித்து காட்டியும் வருகிறது. மொத்தத்தில் இந்த சத்துணவு திட்டமானது மாணவர்களின் உடல் நிலை, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் வெற்றிகரமாக வலம் வர உதவியது.

என்னென்ன பயன்கள்

என்னென்ன பயன்கள்

தமிழகத்தில் மட்டும் சுமார் மொத்த சத்துணவு கூடங்களின் எண்ணிக்கை 43,283 ஆகும். இதே சத்துணவு திட்டத்தினால் பயன்பெரும் மாணவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்திற்கும் மேல். இந்த சத்துணவு திட்டத்தினால் பல பயன்கள் உண்டு எனலாம்.

ஒன்று மாணவர்களுக்கு சத்தான உணவு சரியான நேரத்தில் கிடைக்கிறது

இரண்டாவது இதனால் மாணவர்களின் ஊட்டச்சத்தும் அதிகரிக்கிறது

இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது. மாணவர்களின் கல்வியில் இடை நிற்காமல் தொடர பயனுள்ளதாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் தமிழக மாணவர்களின் கல்வி, வேலை, பொருளாதாரம் என அனைத்திலும் மேற்கண்ட திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்பது மறுக்க முடியா உண்மையே.

 நீங்க என்ன சொல்றீங்க.. உங்களுக்கு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட அனுபவம் உண்டா? உங்க கருத்தை பதிவிடுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What is Mid day meal for school children? Who introduced it first?

What is a nutrition plan? Who introduced it first?/சத்துணவு திட்டம் உருவானது எப்படி..? முதலில் அறிமுகம் செய்தது யார்..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.