ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவோம் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப்

புது டெல்லி ,

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த அணிகள் தயாரகி வருகின்ரன. இந்நிலையில் இந்திய அணி டி-20 உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு முன் ஆசிய கோப்பை விளையாடுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு தகுதிச் சுற்று அணிகள் கலந்து கொள்கின்றன. இத்தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது.

குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசியாக கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இதே துபாய் மைதானத்தில் மோதிய போது பாகிஸ்தான் உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்தது.

கடைசி உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது போல் இந்த முறையிம் சரியான திட்டங்களுடன் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னா வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியதாவது,

வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் பாகிஸ்தானின் வியூகம் சிறப்பானதாக தோன்றுகிறது. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் சமீபத்தில் பாகிஸ்தான் அணியில் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் நிகழ்த்தப்படுவதில்லை.

ஆனால் இந்தியாவை நீங்கள் பார்க்கும் போது இந்த வருடம் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் என்ற நிலைமை சீரற்ற சூழ்நிலையை காட்டுகிறது. இந்திய அணியில் விராட் கோலி இல்லை. ரோகித் சர்மா மற்றும் ராகுல் காயமடைகின்றனர். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றவர்கள் கேப்டன்களாக செயல்படுகின்றனர். ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்படுகிறார். அந்த வகையில் அவர்கள் சிறந்த அணியை கட்டமைப்பதற்கே தடுமாறுகிறார்கள்.

இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதை வைத்து அவர்களால் உறுதியான சிறந்த 16 பேர் கொண்ட அணியை உருவாக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு சிறந்த 11 பேர் கொண்ட அணியில் உருவாக்குவதிலும் பிரச்சனை ஏற்படும். கடந்த வருடம் இதுபோன்ற தவறுகளை அவர்கள் செய்ததாலேயே பாகிஸ்தான் வென்றது.

எனவே இம்முறையும் அதே தவறை செய்யும் இந்தியாவின் குறையை பயன்படுத்தி பாகிஸ்தான் மீண்டும் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.