Samsung இன் "More Than A Monster" Galaxy M13 சவாலை ஏற்றுக்கொண்டுள்ள உங்கள் அபிமான நட்சத்திரங்கள் ஸ்ரேயா சரண், அஸ்நூர் கவுர், சித்தார்த் நிகமின் ஆச்சரியமூட்டும் அனுபவங்கள்: நீங்கள் தயாரா?

சமீபத்தில் வெளியான “More Than A Monster” என்று வர்ணிக்கப்படக்கூடிய மொபைலான Samsung இன் Galaxy M13 4G மற்றும் 5G மாடல் மொபைல்கள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டி டாஸ்கிங் வாடிக்கையாளர்களுக்காகவே தரமான மல்டி டாஸ்கிங் மொபைல் சந்தையில் விற்பனையாகி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அதன் முக்கிய அம்சங்களான powerful processor, expandable RAM, massive battery, fantastic camera மற்றும் immersive display ஆகியவையே இந்த மொபைலை மற்ற மொபைல்களிலிருந்து தனித்துவப்படுத்தி காட்டுகிறது.

சமீபத்தில்தான் சாம்சங் நிறுவனம் “More Than A Monster” என்ற சவாலை அறிவித்தது. இதன்படி மூன்று முக்கிய பிரபலங்களான ஸ்ரேயா சரண் , அஸ்நூர் கவுர், சித்தார்த் நிகம் ஆகியோரை இந்த சவாலை ஏற்றுக் கொள்ளும்படியும் அழைப்பு விடுத்தது.

இந்த சவால் என்னவென்றால் “More Than A Monster”
Galaxy M13
மொபைலின் மல்டி டாஸ்கிங் திறனுக்கு ஈடாக சவாலை ஏற்றுக் கொள்பவர்கள் தங்களின் பன்முகத்திறனை வெளிப்படுத்த முடியுமா என்பதே அந்த சவால்.

இந்த மூன்று பிரபலங்களும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு தங்களின் பன்முகத்திறமைகளை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அது குறித்து அவர்களே அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவும் இட்டுள்ளனர். மொபைல் பாக்ஸை அன்பாக்ஸ் செய்யும்போதே மூன்று பேரும் ஆச்சரியத்தில் உறைந்துவிட்டனர். காரணம் Samsung இன் “More Than A Monster” Galaxy M13 மொபைல் சீரிஸ்கள் மறுசுழற்சி மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாக்ஸில் பேக்கிங் செய்து அனுப்பப் படுகின்றன‌. மேலும் அதோடு பயன்பாட்டிற்கு பின் தூக்கிப்போட்டாலும் விதையாக வளரக்கூடிய ஒரு மக்கும் காகித நோட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சார்ந்து அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க கூடிய ஒரு சில நிறுவனங்களில் தற்போது சாம்சங்கும் இணைந்திருப்பது இந்த பிரபலங்களை குசியாக்கியுள்ளது.

இந்த சவாலை முதலில் ஏற்றுக்கொண்டது நடிகரும் பிரபலமுமான அஸ்நூர் கவுர் தான். ஒரு நடிகையாக மற்றும் திறமை வாய்ந்த பெண்ணாக அவரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்‌. அதற்காக அவர் நடனம்‌ ஆடிக் கொண்டே சுவையான Thai Red Curry செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் Samsung Galaxy M13 மொபைலின் திறன் குறித்தும் வியந்து பாராட்டியுள்ளார்.

View this post on Instagram A post shared by Ashnoor Kaur (@ashnoorkaur)

அடுத்ததாக சவாலை ஏற்றுக் கொண்டவர் சித்தார்த் நிகம். தொலைக்காட்சி பிரபலமான இவர் ஒரு கேமிங் காதலரும் கூட. அதற்காகவே More Than A Monster” Galaxy M13 சவாலை ஏற்றுக்கொண்டு ஹெவி டியூட்டி விளையாட்டுக்களை விளையாடி மான்ஸ்ட்டரோடு போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்‌. ஆனால் கேமிங்குக்கு நடவில் இடையூறு ஏற்பட்டாலும் எந்தவித தடையும் இல்லாமல் Samsung Monster” Galaxy M13 இல் விளையாட்டை தொடரலாம் என்பதை பார்த்து வியந்து அதை அவரே தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram A post shared by Siddharth Nigam (@thesiddharthnigam)

அடுத்ததாக வரிசையில் தமிழ்நாட்டிற்கு மிகவும் நெருக்கமான நடிகையும் உடல் ஆரோக்கியத்திற்கே உதாரணமாக சொல்லப்படுபவருமான ஸ்ரேயா சரண். இவரும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு ஒரே நேரத்தில் தன் அன்றாட வாழ்க்கையில் செய்துக் கொண்டிருக்கும் இரு வேலைகளை ஒன்றாக செய்திருக்கிறார். மான்ஸ்ட்டரின் மல்டி டாஸ்க்கிங் போலவே யோகா செய்துக் கொண்டே மேக்கப் போட்டுக்கொண்டு அதை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.

View this post on Instagram A post shared by Shriya Saran (@shriya_saran1109)

இதே போல் பல்வேறு பிரபலங்களும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்கும் பங்கேற்க ஆர்வம் இருப்பது புரிகிறது. பிறகென்ன வெயிட்டிங் உடனே சாம்சங் இந்தியா இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று “How To Participate” ரீல்ஸ பாருங்க. இந்த பிரபலங்களை போலவே உங்களுக்கு இருக்க இரண்டு திறமைகள ஒரே நேரத்தில் செய்து வீடியோ எடுத்துக்கோங்க. பின்னர் இன்ஸ்டாகிராமில் Samsung India வினுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் your favourite challenger ஆகிய பக்கங்களை டேக் செய்து #MoreThanAMonster மற்றும் #GalaxyM13 ஆகிய ஹேஸ்டேகுகளை பதிவிட்டு உங்கள் வீடியோவை ரீல்ஸாக பதிவிடுங்கள்.

தற்போது ஆரம்பமாகி நடந்துக் கொண்டிருக்கும் இந்த சவால் போட்டியில் நீங்கள்
ஆகஸ்ட் 31,2022
வரை கலந்துக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

View this post on Instagram A post shared by Samsung India (@samsungindia)

Samsung Galaxy M13 இன் சிறப்பம்சங்கள்:

Samsung Galaxy M13
massive 6000mAh battery with a 15W in box charger, up to 12GB RAM with RAM Plus for seamless multitasking மற்றும் auto data switching feature, 5G connectivity with 11 bands என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

நீங்கள் ஒரு மல்டி டாஸ்கிங் திறனுள்ளவராக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறந்த மொபைல் இந்த Samsung Galaxy M13 4G மற்றும் 5G தான். எனவே, ஆகஸ்ட் 4 துவங்கும் இந்த “More Than A Monster” Galaxy M13 சவாலில் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள்.

தற்போது Samsung Galaxy M13 4G மற்றும் 5G
Amazon.com
மற்றும் சாம்சங்கின் நேரடி விற்பனை கடைகளில் மிட்நைட் ப்ளூ , ஸ்டார்டஸ்ட் ப்ரௌன், அக்வா கிரீன் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கின்றன‌.. இதன் விலையை பொறுத்தவரை Galaxy M13 4Gயின் 4GB+64GB வேரியன்ட் ரூபாய் 10,999 என்ற‌ விலையிலும், 6GB+128GB வேரியன்ட் ரூபாய் 12,999 என்ற‌ விலையிலும் கிடைக்கின்றன. அதேபோல் Galaxy M13 5Gயின் 4GB+64GB வேரியன்ட் ரூபாய் 13,999 என்ற‌ விலையிலும், 6GB+128GB வேரியன்ட் ரூபாய் 15,999 என்ற‌ விலையிலும் கிடைக்கிறது. விதிமுறைகளோடு கூடிய வங்கி சலுகைகளும் உண்டு. உடனே முந்துங்கள்.

புத்தம் புதிய Samsung Galaxy M13 பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, இங்கே
க்ளிக்
செய்யவும்
.

Disclaimer: The article has been produced on behalf of Samsung by the Times Internet’s Spotlight team.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.