உயர்தர பரீட்சை: செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை

சமீபத்தில் நடைபெற்ற  2021 கல்வி பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாது போன பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக செயன்முறை பரீட்சையில் தோற்ற முடியாமற் போனவர்கள் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் அதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை சுட்டிலக்கம், பெயர், பாடம் மற்றும் பரீட்சார்த்தியின் தொலைபேசி இலக்கம் உள்ளடங்கலான விண்ணப்பங்களை வட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப முடியும்.

அனுப்ப வேண்டிய வட்ஸ்அப் இலக்கம் 071 81 56 717 என்பதாகும்.

மின்னஞ்சல் முகவரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.