தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு இந்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் எழுதியுள்ள கடிதத்தில் சுடடிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செயலாளர் ராஜேஷ் புஷன். தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதேவேளை,தமிழகத்தில் புதிதாக 650 ஆண்கள், 444 பெண்கள் என மொத்தம் 1.092 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 239 பேர், கோவையில் 127 பேர், செங்கல்பட்டில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 10 ஆயிரத்து 261 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 652 பேரும், கோவையில் 957 பேரும், செங்கல்பட்டில் 873 பேரும், சிகிச்சை பெற்றுவருவதாக
தமிழகத்தில் இன்றய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.