பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபராக, ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியர் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார். புதிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் வெளியிட்ட சமூகவலைதள பதிவு:பிலிப்பைன்ஸ் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
இந்தியா – பிலிபைன்ஸ் உறவை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தேன். அந்நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு தரும் என அவருக்கு உறுதி அளித்தேன். மேலும், இந்தோ – -பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் கொள்கையில் பிலிப்பைன்ஸ் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துரைத்தேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ப்ரெடினன்ட் மார்கோஸ் ஜூனியருடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக நேற்று உரையாடினார்.தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அதிபராக, ப்ரெடினன்ட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்