மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், உயரதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்; மற்றொருவர் காயமடைந்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில் அமைந்துள்ளது இந்திய அருங்காட்சியகம். இதன் பாதுகாப்புப் பணியில், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.அருங்காட்சியகத்தின் பின்புறத்தில் வீரர்கள் தங்கியிருப்பதற்கான அறை உள்ளது. நேற்று மாலையில் அங்கு இருந்த ஹெட் கான்ஸ்டபிள் ஏ.கே. மிஸ்ரா, திடீரென ஏ.கே., – 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுடத்துவங்கினார். இதில், உதவி சப் – இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். உதவி கமாண்டர் ஒருவர் காயமடைந்தார்.படையின் ஐ.ஜி., சுதிர் குமார் அங்கு விரைந்து, ஹெட் கான்ஸ்டபிள் மிஸ்ராவிடம் பேசினார்.அதையடுத்து, அவர்துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரைக் கைது செய்து, கோல்கட்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement