லட்சாதிபதியாக அஸ்ட்ரால் நிறுவனம் கொடுத்த வாய்ப்பு.. 35609% வருமானம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

அஸ்ட்ரால் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 40,076.74 கோடி ரூபாயாக உள்ளது. லார்ஜ் கேப் நிறுவனமான இது, பிளாஸ்டிக் நிறுவனமாகும். இது முன்னணி CPVC பைப் நிறுவனமாகும்.

இந்தியாவில் பல்வேறு வகையான CPVC மற்றும் PVC பைப்களை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனம் ஒழுங்குமுறை தாக்கல் விதிமுறைகளின் படி, 42வது விதியின் படி, பங்குதாரர்களின் உரிமையை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக ஆகஸ்ட் 22, 2022ரெக்கார்டு தேதியாக அறிவித்துள்ளது.

மாதம் 150000 வருமானம் பெற எளிய வழி..100% பாதுகாப்பு ‘நோ ரிஸ்க்’..!

டிவிடெண்ட் அறிவிப்பு

டிவிடெண்ட் அறிவிப்பு

இதன் மூலம் ஒரு பங்குக்கு இறுதி டிவிடெண்டாக 175% அல்லது 1.75 ரூபாயாக அறிவித்துள்ளது. இந்த ஈக்விட்டி பங்கின் முகமதிப்பு 1 ரூபாயாகும். இந்த டிவிடெண்ட் பற்றி அடுத்த ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

ஆஸ்ட்ரால் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 1989 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது 1% மேலாக ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கின் விலையானது ஆகஸ்ட் 5, 2007ல் 5.57 ரூபாயாக இருந்தது. இதே ஆகஸ்ட் 5, 2022ல் 35,609.16% ஏற்றம் கண்டுள்ளது.

 எவ்வளவு ஏற்றம்?
 

எவ்வளவு ஏற்றம்?

இப்பங்கின் விலையானது கடந்த ஆக்ஸ்ட் 11, 2017ல் இப்பங்கின் விலையானது 385.14 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது தற்போதைய நிலையில் இருந்து 416.44% ஏற்றம் கண்டுள்ளது. எனினும் கடந்த ஒரு ஆண்டில் இப்பங்கின் விலையானது 7.50% சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 14.71% ஆக ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் 5.73% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒரு மாதத்தி,ல் 16.95% ஏற்றம் கண்டுள்ளது.

 இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

கடைசியாக இந்த பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 1.58% ஏற்றம் கண்டு, 1994.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 2524.95 ரூபாயாக ஏற்றம் கண்டும், 52 வார குறைந்தபட்ச விலை 1581.55 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி எஸ் இ-யில் இந்த பங்கின் விலையானது 1.50% ஏற்றம் கண்டு, 1994.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 2525 ரூபாயாக ஏற்றம் கண்டும், 52 வார குறைந்தபட்ச விலை 1584 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This multibagger stock return to 35609%: Super chance given by astral ltd

This multibagger stock return to 35609%: Super chance given by astral ltd/லட்சாதிபதியாக அஸ்ட்ரால் நிறுவனம் கொடுத்த வாய்ப்பு.. 35609% வருமானம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Story first published: Sunday, August 7, 2022, 11:26 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.