ஸ்ரீஹரிகோட்டா: குறைந்த எடை கொண்ட 2 செயற்கைகோள்களை சுமந்து எஸ்எஸ்எல்வி -டி1 ராக்கெட் இன்று (ஆக., 07) காலை 9.18 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது வரை அதிக எடை கொண்ட செயற்கைகோள்களே சுமந்து சென்ற நிலையில் தற்போது மிக குறைந்த எடை கொண்ட செயற்கைகோள் அனுப்பும் பணியை இஸ்ரோ துவக்கி இருக்கிறது. இது ஒரு வரலாற்றுச்சாதனையாகும்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மைதானத்தில் இருந்து விண்ணிற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பியது. இதுவரை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது இஸ்ரோ. இதில் பிஎஸ்எல்வி 1,860 கிலோ , ஜிஎஸ்எல்வி 4 ஆயிரம் கிலோ வரை எடையை சுமந்து செல்லும். எஸ்எஸ்எல்வி மிக குறைந்த 500 கிலோ வரையிலான எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும்.

750 பேர் கொண்ட மாணவிகள் குழு
இந்த எஸ்எஸ்எல்வி ராக்கெட் 145 கிலோ எடை கொண்ட இஓஎஸ்2 , இது பூமியை கண்காணிக்க உதவும் . 8 கிலோ கொண்ட ஆசாதிசேட் செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. ஆசாதிசேட் கல்விசார்ந்த ஒன்றாகும். இதனை 750 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் தயாரித்துள்ளனர்.
இது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் இந்தியா அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement