”அந்த ஷோ-க்கு போற அளவுக்கு என்னுடைய செக்‌ஷுவல் லைஃப் இல்ல” – நடிகை டாப்சி அதிரடி பதிலடி!

சினிமாத்துறையில் சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும் பஞ்சமே இருக்காத இடம்னா அது பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்தி திரையுலகத்தில் அண்மைக்காலமாக படங்களை காட்டிலும் நட்சத்திரங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய விவகாரங்களே லைம்லைட்டில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரன் நிகழ்ச்சிதான் தற்போதைய ஹாட் டாபிக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது.

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் முதல் முன்னணி, புதிய பிரபலங்கள் பங்கேற்று உரையாடுவது வழக்கம். அண்மையில் தென்னிந்திய நடிகர்களான தனுஷ், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோரும் பங்கேற்றிருந்தார்கள். பொதுவாகவே காஃபி வித் கரன் நிகழ்ச்சிக்கு வரும் நட்சத்திரங்களிடம் விவகாரமான கேள்விகளையே கரன் ஜோஹர் முன்வைப்பார் என்ற புரிதல் உண்டு.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனின் புரோமோ வீடியோ சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. அதில் பல பிரபலங்களும் இடம்பெற்றிருந்தார்கள். அமிர் கானும், கரீனா கபூர் கானும் லால் சிங் சத்தார் படத்துக்கான புரோமொஷனை முன்னிட்டு கடைசியாக வெளியான காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

அதில், கரீனா கபூர் கானிடம் 2 குழந்தைகள் பிறந்த பிறகு உங்களுடைய இல்லற வாழ்க்கை எப்படி இருக்கிறது என கரன் ஜோஹர் விவகாரமான கேள்வியை எழுப்ப, அதற்கு கரீனாவும் “கரனுக்கு தெரிந்திருக்கும். ஏனெனில் அவருக்கும் ட்வின்ஸ் குழந்தைகள் இருக்கே” என அதிரடியாக பதிலளிக்க, அதற்கு கரன் ஜோஹர், “இதுக்கு என்னால கமெண்ட் பண்ண முடியாது. அம்மா ஷோ பாத்துட்டு இருப்பாங்க” எனக் கூறினார்.

உடனே குறுக்கிட்ட அமீர்கான், “அப்போ செக்‌ஷுவல் ரிலேஷன்ஷிப் பத்தி கேள்வி கேக்குறதை உங்க அம்மா பொருட்படுத்த மாட்டாங்களா? இதுலா ஒரு கேள்வியா” என எதிர்கேள்வி கேட்டிருப்பார். கரனின் கேள்வியும் கரீனா மற்றும் அமிரின் பதிலடியும் பாலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி இருக்கையில், தனது நடிப்பில் உருவாகியுள்ள தபோரா படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி பன்னுவிடம் காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் தன்னை அழைக்காதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு, “காஃபி வித் கரன் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் அளவுக்கு எனது பாலியல் வாழ்க்கை ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை.”
என நச்சென்று பதிலளித்துச் சென்றிருக்கிறார்.

கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரன் நிகழ்ச்சி சிறந்த டாக் ஷோக்கான இந்தியன் டெலிவிஷன் அகாடமி விருதை கடந்த 2007ம் ஆண்டு பெற்றிருந்ததும் நினைவுக்கூரத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.