தங்கத்தினை போதும் என்று கூறுபவர்கள் இந்தியாவில் இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்கள் குழந்தைகளாகத் தான் இருப்பார்கள்.
எனினும் ஒரு தனி நபர் அதிகபட்சம் எவ்வளவு தங்கத்தினை வாங்கலாம் என்பது குறித்து யோசித்திருப்போமா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் பலரும் கூறுவார்கள்?
எனினும் ஒரு போர்ட்போலியோவில் ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? இது குறித்து முதலீட்டு நிபுணர்கள் என்ன கூறுகின்றனர், வாருங்கள் பார்க்கலாம்.
12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

போர்ட்போலியோ?
சேமிப்பு என்பதே நம் வாழ்வில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது அவர்களின் நீண்டகால இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக அவர்கள் நிதியினை சரியாக நிர்வகித்தல் அவசியமாகிறது. எனினும் குறுகிய கால மற்றும் நீண்டகால இலக்குகளை அடைய போர்ட்போலியோவினை வைத்திருப்பது மிக அவசியம்.

தங்கம் அவசியம்
அப்படிப்பட்ட அவசியமான போர்ட்போலியோவில் தங்கம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுவதால், தங்கம் நிச்சயம் ஒவ்வொருவரின் போர்ட்போலியோவிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

எவ்வளவு இருக்கலாம்?
ஒருவரின் போர்ட்போலியோவில் ஒருவர் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்கலாம் என்பது குறித்து, மைபண்ட்பஜார்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனமான வினித் கந்தாரே கூறுகையில், ஒருவரின் போர்ட்போலியோவில் 10 – 15% தங்கத்தினை வைத்திருக்க வேண்டும். இது பொருளாதார சரிவின்போது அபரிதமான வருவாயினை கொடுக்கலாம். இது தங்க இடிஎஃப் அல்லது எஸ்ஐபி மூலமாக வருமானம் கொடுக்கும் ஒன்றாக இருக்கலாம்.

எப்படி செய்யலாம்?
பல நூற்றாண்டுகளாகவே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகின்றது. நகைகள், காயின்கள், பார்கள் மற்றும் டிஜிட்டல் கோல்டு, இடிஎஃப்கள் உள்ளிட்ட வடிவில் நிபுணர்கள் முதலீடுகளை செய்யலாம். இது முதலீட்டாளர்களுக்கு விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.

அவசியமான முதலீடு
தொடர்ந்து நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம். இதனால் தங்கம் உங்கள் போர்ட்போலியோவில், நீண்டகால நோக்கில் உங்களது போர்ட்போலியோவில் இருப்பது அவசியம். மற்ற முதலீடுகளை காட்டிலும் நீண்டகால நோக்கில் தங்கம் லாபகரமானதாக இருக்கலாம்.
How much gold can you have in your portfolio?
How much gold can you have in your portfolio?/ஒருவர் எவ்வளவு தங்கம் வாங்கலாம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு..!!