கராச்சி:பாகிஸ்தானில் கர்ப்பிணியை உதைத்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலரை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சனா என்ற பெண் வீட்டுவேலை செய்து வருகிறார். இவர் தற்போது ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் இவர் அதிகாலை 5:00 மணிக்கு தன் 5 வயது மகனுடன் குடியிருப்புக்கு வந்தார். அப்போது, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் சனாவை உள்ளே விட மறுத்து வாக்குவாதம் செய்தனர்.
அவரை விரட்ட காவலருக்கு உத்தரவிட்டனர். காவலர் ஷூ அணிந்திருந்த காலால் சனாவை எட்டி உதைத்தார். சாலையில் விழுந்த சனா மயங்கினார். குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் பரவியது. இதையடுத்து, சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா, கர்ப்பிணியை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கராச்சி போலீசார் நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் காவலரை கைது செய்தனர். குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement