இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் அடுத்தகட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பல வருடங்களாக இழந்த வர்த்தகத்தை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களையும், மாற்றங்களையும் செய்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு தொழிற்சாலையைக் கைப்பற்றும் ஒப்பந்தம் போட்டுள்ள டாடா மோட்டார்ஸ், குஜராத் தொழிற்சாலையில் என்ன செய்யப்போகிறது தெரியுமா..?
குறிப்பாக ஊழியர்கள் நிலை என்ன தெரியுமா..? டாடாவின் மாஸ்டர் பிளான்..!
இந்தியாவை விட்டு வெளியேறிய ஃபோர்டுடன் ஒப்பந்தம் செய்துள்ள டாடா.. எதற்காக தெரியுமா?

போர்டு கார் தொழிற்சாலை
குஜராத் சனந்த் பகுதியில் இருக்கும் போர்டு கார் தொழிற்சாலை கையகப்படுத்தியது மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி அளவான 3,00,000 யூனிட் உற்பத்தித் திறனை 40 சதவீதம் அதிகரித்து 4,20,000 யூனிட்களாக உயர்த்த முடியும். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்தும்.

பவர்டிரெய்ன் உற்பத்தி வசதி
இதுமட்டும் அல்லாமல் சனந் தொழிற்சாலையின்’பவர்டிரெய்ன் உற்பத்தி வசதி’யை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து “பரஸ்பர ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி” குத்தகைக்கு எடுத்து ஃபோர்டு இந்தியா தொடர்ந்து இயக்க உள்ளது.

கைமாற்றம்
இந்தக் குத்தகையில் டாடா-விடம் இருந்து போர்டு பவர்டிரெய்ன் உற்பத்தி ஆலையின் நிலம் மற்றும் கட்டிடங்களைப் பெறும், இந்த வசதிகள் மூலம் உற்பத்தியில் எவ்விதமான தொய்வும் இல்லாமல் எளிதாக வர்த்தகத்தைக் கைமாற்ற முடியும்.

ஊழியர்கள்
மேலும், ஃபோர்டு இந்தியாவின் பவர்டிரெய்ன் உற்பத்தி ஆலையில் தகுதியான ஊழியர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்-ல் (TPEML) வேலை வழங்க இருதரப்பிலும் ஒப்புத்தல் பெறப்பட்டு உள்ளது.

முதலீடு
டாடா மோட்டார்ஸின் தற்போதைய மற்றும் எதிர்கால வாகன தளங்களுக்கு ஏற்ப ஆலையை மறுகட்டமைக்கத் தேவையான முதலீடுகளை TPEML செய்ய முடிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

போர்டு இந்தியா
கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் போர்டு இந்தியா நிறுவனம் இந்திய வர்த்தகச் சந்தையில் லாபத்தை அடைய முடியாத காரணத்தாலும், சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான இழப்பை எதிர்கொண்டதாலும் இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது.

மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய்
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு இந்தியாவில் லாபம் ஈட்ட பல ஆண்டுகளாகப் போராடியது மட்டும் அல்லாமல் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல் கார் விற்பனை சந்தையில் போதிய வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் அடைய முடியாமல் மாட்டிக்கொண்டது போர்டு.
Tata Motors Big plan with Ford’s Gujarat plant; employees will benefit
Tata Motors Big plan with Ford’s Gujarat plant; employees will benefit டாடா-வின் மாஸ்டர் பிளான்.. குஜராத் கார் தொழிற்சாலை-யில் என்ன செய்யப் போகிறது தெரியுமா..?