தொண்டைச்சளி என்பதை ஆங்கிலத்தில் pharyngitis என்பார்கள்.
பெரும்பாலானவர்க்கு வைரஸ் கிருமியினால்தான் இது வரும்.
வைரஸ் கிருமியினால் வரும் தொண்டை வலி,சளி மற்றும் கரகரப்பு சிலநாட்களில் தானாகச்சரியாகி விடும்.
இருந்தாலும் இது சிலருக்கு வலியை தருபவையாக மாறிவிடும். எனவே இவற்றை எளியமுறையில் நீக்குவது சிறந்தது.
சில மூலிகை பொருட்கள் தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Photo – vinmec
- 250-300 மில்லி லிட்டர் நீரை எடுத்து 5 நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயை ஒரு நாளைக்கு 3-4 முறை கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
- 15-20 மிலி நெல்லிக்காய் ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒருநாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும்.
- 1 டீஸ்பூன் வெந்தயத்தை 250 மில்லி லிட்டர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டைப் புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- 250 மில்லி லிட்டர் நீரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- 4-5 துளசி இலைகளை சிறிது நீரில் போட்டு கொதிக்க வைட்டு இறக்கி, வடிகட்டி, அத்துடன் சுவைக்கேற்ப தேன் மற்றும் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
- ஒரு இன்ச் நற்பதமான இஞ்சியை தட்டி ஒரு கப் நீரில் போட்டு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
- ஒரு கப் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது தவிர, நாள் முழுவதும் சுடுநீரை மட்டுமே குடிக்க வேண்டும்.