தற்போது, நாட்டில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் புதிதாக வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணைப்புக்களை வழங்குவதற்கு தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த உபகரணங்கள் மற்றும் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான திறந்த கடன் பத்திரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் போதுமான அளவு டொலர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
அத்துடன், திடீரென்று ஏற்படுகின்ற செயலிழப்புக்களை சீர் செய்வதற்கு தற்போதுள்ள மூலப்பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும் என்பதால் புதிய இணைப்புகள் வழங்குவதை தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளதாக மின்சார சபை மேலும், தெரிவித்துள்ளது.