போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன்..! – ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி ..!!

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 188 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். போட்டி முதன்முதலில் இந்தியாவில் நடைபெற்றது . போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றினார் . அதில் பேசிய முதல்வர் “ செஸ் போட்டியில் வென்றவர்களை விட நான் மகிழ்ச்சியாக உள்ளேன். மிக குறுகிய காலத்தில் 4 மாதத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன ” என்றார் .

வெளிநாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். விளையாட்டில் முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு திராவிட மாடல் தமிழ்நாடு அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில் வீரர்களை உருவாக்கும் பொருட்டு ரூ.25 கோடி மதிப்பில் “ஒலிம்பிக் தங்க வேட்டை” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர், ஆசிய பீச் வாலிபால் தொடர் ஆகியவற்றை சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சிலம்பத்திற்கு தேசிய அங்கீகாரம் பெற்று தர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டுத்துறை முன்னிலும் அதிக பாய்ச்சலுடன் செயல்படும், எதிலும் வெற்றி தோல்வி முக்கியமல்ல, பங்கேற்பே முக்கியம்

அன்புள்ள வெளிநாட்டு வீரர்களே…சென்னையை மறந்துவிட வேண்டாம்; உங்களுக்காக ஒரு சகோதரன் இங்கே இருக்கிறேன்”- இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.