‘ப்ரா’ அணியாமல் இருப்பதே ஆரோக்கியம்: அறிவியல் கூறும் உண்மை

ப்ரா இல்லாமல் ஒருநாள் என்ற பரப்புரை ஒருபுறம் கேட்கிறது. அதெல்லாம் நமக்கெதுக்குப்பா என சிலர் காதைப் பொத்திக் கொள்ளும் நிலையில்தான், இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டி பெசன்கான் மருத்துவமனை மருத்துஆராய்ச்சி படிப்பு மையத்தின் விரிவுரையாளர் ஜூன் டெனிஸ் ரெவ்லின் என்பவர் பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ப்ரா அணிவது நல்லதா? அல்லது ப்ரா அணியாமல் இருப்பதா என ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
18 வயது முதல் 35 வயது கொண்ட 330 பெண்கள் இந்த ஆராய்ச்சியில் தன்னார்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ப்ரா அணியும் பெண்களை காட்டிலும் ப்ரா அணியாத பெண்களின் உடலில் இயற்கையாக சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக மார்பு காம்புகள் புத்துணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளன. மேலும் பெண்களுக்கு மன அழுத்தமும் சற்று குறைந்துள்ளது. இந்தப் பெண்கள் முற்றிலும் ப்ரா அணிவதை கைவிட்டவர்கள்.
எனினும் இந்தியா போன்ற நாடுகளில் ப்ரா அணிவது ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. ப்ரா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் கலாசார ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஏனெனில் பெண்களுக்கென்று சமூக ரீதியாக சில உடைகள் உள்ளன. ப்ரா அணியாத வயதுவந்த பெண்களை அந்த கலாசார உலகம் அனுமதிப்பதில்லை.
இதற்கிடையில் இளம் பெண்களும் கட்டாயம் ப்ரா அணிய வேண்டும் என அறிவியல் கூறவில்லை. இது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனினும் ப்ரா அணிவதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவியல் கூறவில்லை. மாறாக பெண்கள் தங்கள் உடல்வாகுக்கு ஏற்ப ப்ரா அணிந்து கொள்ளலாம். ஆனால் ப்ரா அணிவது கட்டாயம் இல்லை என்றே அறிவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அக்டோபர் 13 நேஷனல் நோ ப்ரா டே (National No Bra Day) பரப்புரையும் வலுத்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.