மத்திய பிரதேசத்தில் சாமியார் கைது..! – பெண்ணை சீரழித்தாரா மிர்ச்சி பாபா..?

குழந்தை பாக்கியம் வேண்டி சென்ற பெண்ணை சீரழித்ததாக மிர்ச்சி பாபா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சாமியார் மிர்ச்சி பாபா கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபால் மகளிர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

வைராக்கிய ஆனந்த் கிரி என்பவர் தான் சாமியார் மிர்ச்சி பாபா என்று அழைக்கப்படுகிறார் . இவரிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்றும், குழந்தை வரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் கேட்டுச் சென்றிருக்கிறார்.பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மிர்ச்சி பாபா அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்திருக்கிறார்.
அதை குடித்ததும் அந்த பெண் மயங்கி இருக்கிறார். உடனே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் மிர்ச்சி பாபா. மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சாமியார் மிர்ச்சி பாபாவை ஆவேசமாகி திட்டிவுள்ளார்.“இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி இருக்கிறார்.
ஆனாலும் அந்த பெண் துணிச்சலுடன் சென்று போலீசுக்கு புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து மிர்ச்சி பாபா கைது செய்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்களிடம் இவர் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட மிர்ச்சி பாபா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376, 506 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெறும் பரபரப்பை ஏற்ப்படுத்தயுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.