டாடா கம்யூனிகேஷன்ஸ் 2006-07 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருவாயைக் குறைத்துக் காட்டியதால், அந்தக் காலகட்டத்தில் லைசென்ஸ் கட்டணமாக ரூ. 645 கோடி குறைந்துள்ளது என்று இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தத் தொகையை டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறியுள்ளது.
டாடா-வின் மாஸ்டர் பிளான்.. குஜராத் கார் தொழிற்சாலை-யில் என்ன செய்யபோகிறது தெரியுமா..?

டாடா கம்யூனிகேஷ்ன்ஸ்
2006-07 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ்-இன் NLD, ILD மற்றும் ISP-IT உரிமங்கள் தொடர்பான லாபம் மற்றும் இழப்பு அறிக்கைகள் மற்றும் இருப்பு நிலைக் குறிப்புகளுடன், தணிக்கை செய்யப்பட்ட AGR அறிக்கைகளின் தணிக்கை ஆய்வு முடிவுகளை இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ஆய்வு செய்தது.

நிகர வருவாய்
இந்த ஆய்வின் முடிவில் 2006- 07 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் டாடா கம்யூனிகேஷன்ஸ்-இன் நிகர வருவாய் (Gross Revenue) 13,252.81 கோடி ரூபாய், இந்த வருமானத்திற்கு licence fee அதாவது உரிம கட்டணமாக 950.25 கோடி ரூபாய் பெற வேண்டும் என CAG அமைப்பு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

உரிமக் கட்டணம்
மேலும் சிஏஜி அறிக்கையின்படி, 2006- 07 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் உரிமக் கட்டணமாக (licence fee) ரூ.305.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

645 கோடி ரூபாய்
இந்நிலையில் சிஏஜி மீதமுள்ள 645 கோடி ரூபாயை டெலிகாம் துறை டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திடம் இக்குறிப்பிட காலகட்டத்திற்கு இருந்து வசூலிக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் பங்குகள்
இதன் வாயிலாக இன்று டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 0.88 சதவீதம் சரிந்து 1,092.20 ரூபாயாக உள்ளது. இதேபோல் 2022ல் டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் பங்குகள் சுமார் 24.50 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் இக்காலகட்டத்தில் 52 வார சரிவான 856 ரூபாய் அளவீட்டையும் தொட்டு உள்ளது.
Tata Communications under-reports in gross revenue; CAG asks govt to collect 645 crore
Tata Communications under-reports in gross revenue; CAG asks govt to collect 645 crore வருவாயைக் குறைத்து கணக்குக் காட்டிய டாடா கம்யூனிகேஷன்ஸ்.. கண்டுபிடித்த CAG..!