சீனிகமவில் நேற்று(8) 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த சம்பவத்தில் . தொடர்புடைய இனந்தெரியாத வாகனம் மற்றும் அதன் சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்று அதிகாலை (8) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.