வெளிநாட்டில் புயல்வேக பந்துவீச்சில் தாக்கிய இந்திய வீரர்! அடுத்தடுத்து சரிந்த வீரர்களின் வீடியோ


இங்கிலாந்து கிளப் அணியில் விளையாடி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், டர்ஹாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

ராயல் லண்டன் ஒருநாள் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் மிடில்செக்ஸ் மற்றும் டர்ஹாம் அணிகள் மோதின.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிடில்செக்ஸ் அணிக்காக பந்துவீசினார். அவரது புயல்வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டர்ஹாம் அணி வீரர்கள் திணறினர்.

உமேஷ் யாதவின் வீசிய பந்து மூன்று வீரர்களின் ஸ்டாம்புகளை பதம் பார்த்தது. மேலும் ஒரு வீரரை எல்.பி.டபுள்யூ முறையில் வெளியேற்றிய உமேஷ், மற்றோரு வீரர் அடித்த பந்தை ஒற்றை கையில் அனாயசமாக கேட்ச் செய்து அவுட்டாக்கினார்.

இதனால் டர்ஹாம் அணி 268 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 9.2 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ் 33 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய மிடில்செக்ஸ் அணி 41.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.     

Umesh Yadav

Pic courtesy: Umesh Yadav on Instagram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.