HDFC கடனுக்கான வட்டியை 0.25% உயர்த்தியது.. புதிய வட்டி விகிதம் என்ன தெரியுமா..?

ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, வீட்டுக் கடன்களுக்கான சில்லறை கடன் விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளதாகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குத் தெரிவித்துள்ளது.

இப்புதிய வட்டி விகிதங்கள் திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த வட்டி விகித உயர்வால் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் ஈஎம்ஐ விகிதமும் உயர உள்ளது.

இதனால் ஹெச்டிஎப்சி-யில் கடன் வாங்கியவர்கள் அனைவரும் கூடுதலாக ஈஎம்ஐ செலுத்தத் தயாராகுங்கள்.

ஐடி ஊழியர்கள் சோகம்.. 70% சம்பள உயர்வு கதையெல்லாம் மலை ஏறிவிட்டது..!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு, தொடர்ந்து உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, தற்போது ஹெச்டிஎப்சி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

மீண்டும் வட்டி விகித உயர்வு

மீண்டும் வட்டி விகித உயர்வு

இந்த உயர்வு ரெப்போ விகிதத்தைக் கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய அளவான 5.15 சதவீதத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த இரு கூட்டத்திலும் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்டிஎப்சி லிமிடெட்
 

ஹெச்டிஎப்சி லிமிடெட்

ஹெச்டிஎப்சி லிமிடெட் வருடாந்திர அடிப்படையில் 7.55 சதவீதம் இருந்து குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் கடன் வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் வீட்டுக் கடன்கள், இருப்புப் பரிமாற்றக் கடன்கள், வீடு புதுப்பித்தல் மற்றும் வீட்டு நீட்டிப்புக் கடன்களுக்குப் பொருந்தும்.

ஃப்ளோட்டிங் ரேட் லோன்

ஃப்ளோட்டிங் ரேட் லோன்

HDFC ஆனது, ஃப்ளோட்டிங் ரேட் லோன் என அழைக்கப்படும் அனுசரிப்பு-விகிதக் கடனை வழங்குகிறது, மேலும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (முழுக் கடன் காலத்தின் முதல் இரண்டு வருடங்கள்) நிலையானதாக இருக்கும் அதன் பின்பு அனுசரிப்பு-விகிதக் கடனாக மாற்றப்படும். இது அனைத்து வீட்டுக் கடனுக்கும் பொருந்தும்.

ஸ்பெஷல் ஹோம் லோன்

ஸ்பெஷல் ஹோம் லோன்

இன்றைய வட்டி விகித உயர்வின் மூலம் ஹெச்சிஎப்சி நிறுவனத்தில் ஸ்பெஷல் ஹோம் லோன் வட்டி விகிதங்கள் கீழ் எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் 7.55 முதல் 8.05 சதவீதத்தில் கடனை அளிக்கிறது.

ஸ்டாண்டர்ட் ஹோம் லோன்

ஸ்டாண்டர்ட் ஹோம் லோன்

இதுவே ஸ்டாண்டர்ட் ஹோம் லோன் பிரிவில்

பெண்களுக்கு (30 லட்சம் வரை) : 7.65 – 8.15 சதவீத வட்டி
மற்றவர்களுக்கு (30 லட்சம் வரை) : 7.70 – 8.20 சதவீத வட்டி
பெண்களுக்கு (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) : 7.90 – 8.40 சதவீத வட்டி
மற்றவர்களுக்கு (30.01 லட்சம் முதல் 75 லட்சம் வரை) : 7.95 – 8.45 சதவீத வட்டி
பெண்களுக்கு (75.01 லட்சம் மற்றும் அதற்கு மேல்) : 8.00 – 8.50 சதவீத வட்டி
மற்றவர்களுக்கு(75.01 லட்சம் மற்றும் அதற்கு மேல்) சதவீத வட்டி 8.05 – 8.55 சதவீத வட்டி

சமூகக் கடன் வசதி

சமூகக் கடன் வசதி

கடந்த வாரம் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம், இந்தியாவில் மலிவு விலையில் வீடுகளுக்கு நிதியளிப்பதற்காக USD 1.1 பில்லியன் சிண்டிகேட் சமூகக் கடன் வசதியை நிறைவு செய்வதாக அறிவித்தது. சிண்டிகேட் கடன் என்பது பொதுவாக ஒரு பெரிய கடனாளிக்கு பல கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் கடனாகும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

இந்தப் பரிவர்த்தனை, இந்தியாவின் மிகப்பெரிய சோசியல் லோன் ஆகப் பார்க்கப்பட்டது மட்டும் அல்லாமல் உலகளவில் மிகப்பெரிய சமூகக் கடனாகவும் விளங்குகிறது. மேலும் மேலே குறிப்பிட்ட வட்டி விகிதம் கடன் கொடுக்கப்படும் போது சந்தை நிலவரம், ஆர்பிஐ முடிவுகள் அடிப்படையில் மாறலாம் எனவும் ஹெச்டிஎப்சி தெரிவித்துள்ளது.

மதுரை-க்கு வந்த புதிய ஐடி நிறுவனம்.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC hikes lending rate by 25 bps, EMI get costlier; check New interest rates

HDFC hikes lending rate by 25 bps, EMI get costlier; check New interest rates HDFC கடனுக்கான வட்டியை 0.25% உயர்த்தியது.. புதிய வட்டி விகிதம் என்ன தெரியுமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.