தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் அல்லது QR நடைமுறையின் ஊடாக கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள 1246 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சுமார் 43 இலட்சம் வாகனங்களுக்கு 36,599,301 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வார இறுதி வரை 55 இலட்சத்திற்கும் அதிகமானோர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களிலிருந்து இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களுக்கு பொதுவான ஒதுக்கீட்டை விட அதிகமாக எரிபொருள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.