Startup-க்கு தமிழ் சொல் என்ன தெரியுமா..?

இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டுச் சந்தை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைய முதலும் முக்கியக் காரணமாக இருந்தது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான்.

இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் உருவாகவில்லை என்றால் கட்டாயம் இத்தனை டிஜிட்டல் சேவைகள் வந்திருக்காது.

ஹோம் லோனில் துவங்கி காய்கறி வாங்குவது வரை, மருத்துவமனையில் மருத்துவரைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் புக்கிங் முதல் ஆன்லைன் கல்வி வரையில் அனைத்தும் தற்போது உட்கார்ந்த இடத்திலேயே செய்யும் அளவிற்கு டிஜிட்டல் சேவை வளர்ந்துள்ளது.

ஐடி ஊழியர்கள் சோகம்.. 70% சம்பள உயர்வு கதையெல்லாம் மலை ஏறிவிட்டது..!

பெட்டர் ஹோம் ஆப்

பெட்டர் ஹோம் ஆப்

இந்நிலையில் ஸ்டார்ட்அப் என்னும் சொல்லுக்குத் தமிழ் சொல்-ஐ சென்னை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெட்டர் ஹோம் ஆப் என்னும் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனம் தனது லின்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளது.

புத்தொழில் - Startup

புத்தொழில் – Startup

ஒரு‌ சொல் ஒரு பண்பை விதைக்கும். ஒரு இயக்கத்தைக் கூட‌ உருவாக்கும். “புத்தொழில்”: Startup சொல்லின் தமிழ் சொல்லுக்கு விளக்கம் தேவை இல்லை. இது உறுதியாகப் பண்பை விதைத்து இயக்கமாக மாற்றக்கூடும்.

Startup TN அமைப்பு
 

Startup TN அமைப்பு

Eric Ries “The Lean Startup” என்ற நூல் மூலம் Startup சொல்லை பிரபலமாக்கி பலரை தொழில் தொடங்க வைத்தார். தமிழக அரசு புதிய தொழில் தொடங்கும் பண்பை Startup TN என்ற நிறுவனத்தின் மூலம் சிவராஜா ராமநாதன் அவர்களின் தலைமையில் வளர்த்து வருகிறார்கள்.

10,000 புத்தொழில் நிறுவனங்கள்

10,000 புத்தொழில் நிறுவனங்கள்

2026 ஆம் ஆண்டுக்குள் 10,000 புத்தொழில்களை உருவாக்க வேண்டும்‌ என்ற இலக்கோடு மட்டுமில்லாமல் அது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்

வளர்க புத்தொழில் இயக்கம்!

வளர்க புத்தொழில் இயக்கம்!

புத்தொழில் என்ற சொல் இந்தப் பண்பையும் இலக்கையும் தமிழகத்தின் எல்லா முடுக்குகளுக்கும் எடுத்துச்செல்லும் என்பது உறுதி. இதைப் போல் உலகில் உள்ள மற்ற‌ மொழிகளிலும் “startup” சொல்லை அழகாக மொழி பெயர்த்துத் தொழில் தொடங்கும் பண்பை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். வளர்க புத்தொழில் இயக்கம்!

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் ஸ்டார்ட்அப் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய நிறுவனங்களையும், முதலீடுகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதேவேளையில் தமிழ்நாட்டில் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகி வருகிறது.

மதுரை-க்கு வந்த புதிய ஐடி நிறுவனம்.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know tamil word for startup

Do you know tamil word for startup Startup-க்குத் தமிழ் சொல் என்ன தெரியுமா..?

Story first published: Tuesday, August 9, 2022, 20:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.