‘அந்த’ பணத்தை என்ன செய்கிறீர்கள்..? அரசு கொடுத்த பலே பதில்..!

இன்சூன்ரஸ் நிறுவனங்களில் இன்சூரன்ஸ் போடும் அனைவருமே இன்சூரன்ஸ் க்ளைம் செய்கிறோமா? என்றால் இல்லை. ஒரு சிலருக்கு தேவை இருக்காது, ஆனால் பாதுகாப்புக்காக போட்டு வைப்போம். ஒரு சிலர் குடும்பத்திற்கு தெரியாமலேயே போட்டு வைப்பர். ஆனால் அதனை மறந்து விடுவர்.

சில குடும்பங்களில் இன்சூரன்ஸ் போட்டவர் இறந்திருக்கலாம். ஆனால் அது குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்கலாம். இப்படி பல காரணிகளால், பல ஆயிரம் இன்சூரன்ஸ் திட்டங்கள் முதிர்வுக்கு பின்னரும் கூடம் க்ளைம் செய்யாமல் உள்ளன.

குரங்கு அம்மை நோய்க்கு காப்பீடு உண்டா? என்ன சொல்கிறது இன்சூரன்ஸ் விதிகள்?

மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றம்

மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றம்

ஆனால் இப்படி க்ளைம் செய்யாமல் இருக்கும் பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்ன செய்யும்? என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

கடந்த 5 ஆண்டுகளில் IRDAI ஆனது 1723 கோடி ரூபாய் பணம் உரிமைக் கோரப்படாத பணம் மூத்த குடி மக்கள் நல நிதிக்கு (SCWF) மாற்றியுள்ளது.

 

4 கேள்விகள்

4 கேள்விகள்

ஐஆர்டிஏஐ ஒவ்வொரு ஆண்டும் பாலிதார்களின் உரிமைகோரப்படாத தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டுமா? அப்படியானால் கடந்த 5 ஆண்டுகளில் ஐஆர்டிஏ-வில் இருந்து மூத்த குடி மக்கள் நல நிதிக்கு மாற்றப்பட்ட தொகை உட்பட மற்ற விவரங்கள் என்ன? அந்த நிதியினை பயன்படுத்தி அரசு மூத்த குடிமக்களுக்காக ஏதேனும் திட்டத்தினை உருவாக்கியுள்ளதா? அப்படி திட்டமிடப்பட்டிருந்தால் அதன் விவரங்கள் என்ன? அதன் விவரங்கள் என்ன என்பது குறித்தான கேள்விகள் லோக் சபாவில் கேட்கப்பட்டது.

 அரசின் விளக்கம்
 

அரசின் விளக்கம்

உரிமைகோரப்படாத கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகைகள், சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்கள் அல்லது உரிமைகோருபவர்களுக்கு க்ளைம் கோரிக்கையைப் பெற்றவுடன் அவர்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்படும் என்று IRDAI தெரிவித்துள்ளது. அப்படி உரிமைக்கோராப்படாத நிதியானது 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருப்பின் அதனை மூத்த குடி மக்கள் நிதிக்கு வட்டியுடன் மாற்ற வேண்டும்.

எவ்வளவு நிதி?

எவ்வளவு நிதி?

இப்படி உரிமை கோராப்படாத நிதி மாற்றப்பட்டாலும் கூட, ஒரு பாலிசிதாரர் அல்லது உரிமைகோருபவர், 25 ஆண்டுகள் வரையில் பாலிசிகளை க்ளைம் செய்யத் தகுதியானவர்கள் தான்.

இப்படி மாற்றப்பட்ட தொகையானது

2017 – 18 ல் 81.62 கோடி ரூபாய்

2018 – 19ல் 398.94 கோடி ரூபாய்

2019 – 20ல் 225.05 கோடி ரூபாய்

2020 – 21ல் 388.89 கோடி ரூபாய்

2021- 22ல் 328.69 கோடி ரூபாய்

மொத்தம் இதுவரை 1723.2 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது.

 

 SCWFல் இருந்து நிதியளிக்கப்பட்ட திட்டங்கள்

SCWFல் இருந்து நிதியளிக்கப்பட்ட திட்டங்கள்

1.பிற பாதிக்கப்படக் கூடிய குழுக்கான திட்டம் – ரூ.16 கோடி

2.ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனா(RVY) – ரூ.159.51 கோடி

3. எல்டர்லைன் – நேஷனல் ஹெல்ப்லைன்ஃபார் சீனியர் சிட்டிசன்ஸ் – ரூ.49.19 கோடி

4. வெள்ளி பொருளாதாரத்தினை மேம்படுத்துதல் – (SAGE) – ரூ.20 கோடி

மொத்தம் – ரூ.245.68 கோடி

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What did the government do with the unclaimed insurance amount of Rs.1723 crore in the last 5 years?

What did the government do with the unclaimed insurance amount of Rs.1723 crore in the last 5 years?/அந்த’ பணத்தை என்ன செய்கிறீர்கள்..? அரசு கொடுத்த பலே பதில்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.