இத்தாலியில் குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி பணி பணி ஆரம்பமாகியுள்ளது.
உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகின்றமையினால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.
இதனால் சில நாடுகள் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய குரங்கு அம்மைக்கு எதிராக இத்தாலியில் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் (8) ஆரம்பமாகியுள்ளது.
இந்த தடுப்பூசி பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 2 டோஸ் கொண்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராகவும், வலுவாகவும் செயல்படுகிறது.
முதல் நாளில் 10 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.