பங்குச்சந்தையில் குவியும் EPF பணம்.. இத்தனை லட்சம் கோடியா..?

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் பணியாளர்களுக்கு அவர்களது பணத்திற்கு வரி இல்லாத வருமானம் பெறுவார்கள் என்பது தெரிந்ததே.

வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர்களின் பணத்தை முதலீடு செய்வதின் மூலம் கிடைக்கும் லாபத்தை சந்தாதாரர்களுக்கு வட்டியாக பகிர்ந்து அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எந்தெந்த முறைகளில் முதலீடு செய்கிறது? என்பதை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அது குறித்து தற்போது பார்ப்போம்.

28 கோடி EPF சந்தாதாரர்களின் தரவுகள் கசிவா.. எச்சரிக்கும் உக்ரைன் சைபர் செக்யூரிட்டி!

வருங்கால வைப்பு நிதி (EPF)

வருங்கால வைப்பு நிதி (EPF)

சமீபத்தில் மக்களவையில் வருங்கால வைப்பு நிதியில் கிடைக்கும் பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது? எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்த கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் அவர்கள் விளக்கமாக பதிலளித்துள்ளார்.

முதலீடு

முதலீடு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 85 சதவீத நிதியை டெபிட் பண்ட் என்று கூறப்படும் முறையில் முதலீடு செய்துள்ளது என்றும், மீதமுள்ள 15 சதவீத முதலீடு வர்த்தக நிதிகளில் (ETFs)முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

மேலும் வருங்கால வைப்பு நிதி நிஃப்டி 50, சென்செக்ஸ், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் (CPSEகள்) மற்றும் பாரத் 22 இண்டிக்ஸ் அடிப்படையில் முதலீடு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

முதலீட்டின் விவரங்கள்
 

முதலீட்டின் விவரங்கள்

கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டுக்கான பங்கு முதலீட்டின் விவரங்கள் பின்வருமாறு:

2019-20: ரூ.31,501.09 கோடி மற்றும் ரூ.2,20,236.47 கோடி

2020-21: ரூ.32,070.84 கோடி மற்றும் ரூ.2,18,533.89 கோடி

2021-22: ரூ.43,568.02 கோடி மற்றும் ரூ.2,89,930.79 கோடி

2022-23 (ஜூன் 2022 வரை): ரூ.12,199.26 கோடி மற்றும் ரூ.84,477.67 கோடி

 

மேலாளர்கள்

மேலாளர்கள்

மேலும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராமேஷ்வர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘EPFO ​​ஆல் நியமிக்கப்பட்ட மேலாளர்கள் மூலம் வருங்கால வைப்பு நிதி பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றும், EPFO இன் நிதி ஆலோசகர் மற்றும் தணிக்கையாளர் அனைத்து முதலீடுகளையும் கண்காணிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

போர்ட்ஃபோலியோ மேலாளர்கள் மற்றும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட முதலீட்டு மேலாண்மை அதிகாரிகள் அவ்வப்போது CBT, EPFO ​​ஆல் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, வழிகாட்டுதல்களுக்கு இணங்க முதலீடு உள்ளதா என்பதை கண்காணிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How much of your EPFO money is invested in stocks

How much of your EPFO money is invested in stocks | பங்குச்சந்தையில் குவியும் EPF பணம்.. இத்தனை லட்சம் கோடியா..?

Story first published: Wednesday, August 10, 2022, 16:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.