தர்மபுரி மாவட்டத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கல்லுகுழி முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க நகரில் உள்ள எல்.ஐ.சி அலுவலக கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி மணிகண்டன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.