நியூயார்க்:அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75, கத்தியால் குத்தப்பட்டார்.
இந்தியாவில் மும்பையில் பிறந்தவரும், புக்கர் பரிசு வென்றவருமான சல்மான் ருஷ்டி, ‘த சட்டானிக் வெர்ஸஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார். இது, முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, உலகின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தப் புத்தகம், 1988ல் ஈரானில் தடை செய்யப்பட்டது.
பின், பல இஸ்லாமிய நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. ருஷ்டியை கொல்பவர்களுக்கு, 26 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஈரானின் மறைந்த தலைவர் அயதுல்லா கொமேனி அறிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சல்மான் ருஷ்டி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அறிமுகம் செய்தபோது, மேடைக்கு சென்ற ஒரு நபர், அவரை கத்தியால் குத்தினார். இதில் நிலைகுலைந்து மேடையில் சரிந்து கீழே விழ்ந்த ருஷ்டி, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement