கேரளா: மாலில் குவிந்த மக்கள்; படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியைக் கேன்சல் செய்த படக்குழு!

கேரளாவில் உள்ள ஹைலைட் (HiLITE) என்ற மாலில் ‘தல்லுமாலா’ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியை நடத்த படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் புரோமோஷன் நிகழ்ச்சியையே படக்குழுவினர் ரத்து செய்துவிட்டனர்.

பிரபல மலையாள இயக்குநர் காலித் ரகுமான் இயக்கத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள `தல்லுமல்லா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில், நேற்று கோழிக்கோட்டில் உள்ள பிரபல ஹைலைட் மாலில் படத்திற்கான புரோமஷன் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த விழாவில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலரும் கலந்து கொள்ள இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் லைவில் டொவினோ தாமஸ், மக்கள் கூட்டம்

புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இவர்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். ஒவ்வொரு தளம் முதல் எஸ்கலேட்டர் வரை மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டது படக்குழு. படத்தினுடைய கதாநாயகனாக நடிகர் டொவினோ தாமஸ், தனது இன்ஸ்டாகிராம் லைவில் “மாலில் இவ்வளவு கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். மாலில் இருந்த மக்கள் கூட்டத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும் அவர்களது விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். அங்கு ஏற்பட்ட கூட்டத்தால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.