வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தோ பசிபிக் பகுதியில் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக 16 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அணி, ரபேல் போர் விமானங்களுடன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்தில் கடந்த 10ம் தேதி இறங்கியது. பிரான்ஸ் விமானப்படையின் இந்த பயிற்சி ஆக.,1 0 முதல் செப்.,18 வரை நடைபெற உள்ளது.
10ம் தேதி களமிறங்கிய ரபேல் போர் விமானங்கள் மறு நாள் (ஆக.,11) அதிகாலை, எரிபொருள் நிரப்பிய பின்னர், பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்ஸ் கட்டுப்பாட்டில் அமைந்திருக்கும் நியு கலேடெனியா தீவு பகுதிக்கு கிளம்பி சென்றது.

இது தொடர்பாக டில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கை: பிரான்சில் இருந்து பசிபிக் வரையிலான நீண்ட தூர பயணத்தின் இடையே, தொழில்நுட்ப பரிசோதனைக்காக 10 முதல் 11 வரையில் சூலூர் விமான படை தளத்தில் ரபேல் போர் விமானங்களுடன் பிரான்ஸ் அணி தரையிறங்கியது.
இந்த பயணத்தின் முதல் கட்டத்தில், பிரான்சில் இருந்து நியூகலெடெனியாவிற்கு 72 மணி நேரத்தில், விமான படை குழுவை அனுப்பி, பிரான்ஸ் விமானப்படையின் சக்தியை எடுத்து காட்டுவதே நோக்கமாகும்.இதனை நிறைவேற்ற, ஆசியாவின் எங்களின் முதன்மையான கூட்டாளியான இந்தியாவை நம்பியிருப்பது இயற்கையானது. பிரான்ஸ் அணியினரை வரவேற்ற இந்திய விமானப்படைக்கு எங்களது நன்றி எனக்கூறப்பட்டுள்ளது.

பிரான்சின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ரபேல் போர் விமானங்கள் இரு படைகளிலும் உள்ளது, நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே, ராணுவ தளவாடம் உதவி தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 ல் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், தெற்கு கொரியா, ஜப்பான் , ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement