சோளம் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை இணைய வழி (Online)பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் எதிர்வரும் பெரும்போகத்தில் இருந்து விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்தப்படும். அனைத்து விவசாயிகளின் தகவல்களையும் உள்ளடக்கிய தகவல் அமைப்புடன் கூடிய செயலி (App) ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த இலத்திரனியல் பதிவு மூலம், நாட்டில் சோளம் பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு தேவையான யூரியா உரத்தின் அளவு, அவர்கள் பயிரிடும் நிலத்தின் அளவு, பெறக்கூடிய அறுவடையின் அளவு, பயிரிடப்படும் நிலத்தின் சரியான இடம் போன்ற தகவல்களை மிக இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் சோளப் பயிர்ச்செய்கையை முறையான முறையில் மேற்கொள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.