ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெடாஸ் என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வந்தது.
இந்த பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
இதற்கிடையில் ஜான்சன் அன்ட் ஜான்சனின் பேபி பவுடர் 2023ம் ஆண்டில் உலகளவில் விற்பனை செய்வதை நிறுத்தும் என்று அறிவித்துள்ளது.
உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்… உங்களிடம் இருக்கா?

ஆயிரக்கணக்கான வழக்குகள்
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான நுகர்வோர் வழக்குகளை தொடர்ந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.
உலகளவில் சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் தயாரிப்புக்கு நாங்கள் மாறுவதாக முடிவெடுத்துள்ளோம். சோள மாவு அடிப்படையிலான பவுடர் ஏற்கனவே உலகங்கிலும் உள்ள நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

பல ஆயிரம் வழக்குகள்
நிறுவனம் சுமர் 38000 வழக்குகளை நுகர்வோரிடமிருந்து பெற்றுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ஜே & ஜே, இந்த பவுடர் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனினும் முன்னதாக சில பிரச்சனைகளுக்கு மத்தியில் 3.5 பில்லியன் டாலர் செலவுகளையும் எதிர்கொண்டுள்ளது. இதில் 22 பெண்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமெரிக்கா & கனடாவில் நிறுத்தம்
கடந்த 2020ம் ஆண்டிலேயே ஜான்சன் அண்ட் ஜான்சன் தனது பேபி டால்க் பவுடனை அமெரிக்காவிலும், கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்தியது.
இது சட்ட ரீதியாக பல சவால்கள் எழுந்த நிலையில் பல பாதுகாப்பு குறித்தான தகவல்கள் வெளியானது. இதனால் தேவை வெகுவாக குறைந்தது.

நினைவுகூறத்தக்கது
புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, ஜான்சன் அண்ட் ஜான்சனின் 2 இந்திய தயாரிப்பு கூடங்களில், குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.
johnson & johnson plans to end global sales of talc based baby powder
johnson & johnson plans to end global sales of talc based baby powder/ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் விரைவில் நிறுத்தம்..ஏன் தெரியுமா?