டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை !

லண்டன்,

லண்டனில் 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் அதே அணியை சேர்ந்த மற்றோரு வீரரான பிராவோ டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பிராவோ, ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு பிராவோ சொந்தக்காரரானார். அவரை தவிர வேறு எந்தவொரு பவுலரும் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை கூட இன்னும் தொடவில்லை.

அவருக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் 466 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள பவுலராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் உள்ளார். பிராவோ ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 38 வயதான பிராவோ டி20 கிரிக்கெட்டில் கடந்த 2006 முதல் விளையாடி வருகிறார்.

உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அணிகளில் அவர் விளையாடி உள்ளார். தனது 545-வது டி20 போட்டியில் 600-வது விக்கெட்டை அவர் கைப்பற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 78 விக்கெட்டுகளும், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக்கில் விளையாடி 522 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.