*புதிய எரிசக்தி விலை வரம்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. பிரித்தானியாவில் வெப்பநிலை சரிவடையத் தொடங்கிவிடும்.
*அக்டோபர் மாதம் மிக மோசமான துயரத்தை அளிக்க வாய்ப்பு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி அக்டோபரில் 8 மாதம்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரித்தானிய மக்களை மொத்தமாக தண்டித்துவரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் மிக மோசமான துயரத்தை அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பிரித்தானியர்கள் ஏற்கனவே 40 ஆண்டுகளில் இல்லாத வேகமான விலை உயர்வை எதிர்கொள்கின்றனர், ஆனால் இன்னும் முக்கிய கட்டண உயர்வுகள் வெளிவர உள்ளன.
மட்டுமின்றி, புதிய எரிசக்தி விலை வரம்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இதனால் எரிசக்தி கட்டணமானது தற்போதைய 1,971 பவுண்டுகளில் இருந்து 3,582 பவுண்டுகள் என அதிகரிக்கலாம் எனவும், 2023 ஜனவரியில், இந்த கட்டணமானது 4,266 பவுண்டுகள் என உச்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
@Getty
புதிய சரிசக்தி கட்டணம் அமுலுக்கு வரும் அக்டோபர் மாதத்தில் இருந்தே பிரித்தானியாவில் வெப்பநிலை சரிவடையத் தொடங்கிவிடும்.
அக்டோபர் மாதங்களில் வெப்பநிலை இங்கிலாந்தில் 11.8°C, வேல்ஸ் 11.4°C, ஸ்காட்லாந்து 9.2°C மற்றும் வடக்கு அயர்லாந்தில் 11.0°C என இருக்கும்..
அக்டோபர் மாதங்களில் வெப்பநிலை சரிவடைவதால் மக்கள் ஹீற்றர்களை அதிகமாக பயன்படுத்தும் சூழல் உருவாகும். இதனால் எரிசக்தி கட்டணம் உயரும். இதில் இருந்து தப்பிக்க மக்கள் தேவைக்கு மட்டும் ஹீற்றர்களை பயன்படுத்த வேண்டும் என கோருகின்றனர்.
மட்டுமின்றி, குடியிருப்புகளில் ஹீற்றர்களை பயன்படுத்தி சூடுபடுத்துவதற்கு பதிலாக அதற்கேற்ற ஆடைகளை அணிந்து, சூடான தண்ணீர் போத்தல்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் என கூறுகின்றனர் நிபுணர்கள்.
@Getty
மேலும், புதிய எரிசக்தி விலை வரம்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளபடி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரக் கட்டணத்தில் 400 பவுண்டுகள் சலுகை வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி அக்டோபரில் 8 மாதமாகிவிடும்.
போர் தொடங்கியதைத் தொடர்ந்து எரிவாயு விலை உலகளவில் உயர்ந்ததுடன் தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.
மட்டுமின்றி, ரஷ்யா மெதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிவாயு விநியோகத்தை குறைத்து மூச்சுத் திணற வைத்து வருகிறது.