ஹேப்பி நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 6.71% ஆக சரிவு..!

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதமானது ஜூலை மாதத்தில் 6.71% ஆக குறைந்துள்ளது. இது சற்று குறைந்திருந்தாலும், ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாகவே காணப்படுகிறது.

ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தினை 4 – 6% குள்ளாக இருக்கலாம் என கணித்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 6.71% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது நல்ல விஷயமாகும்.

உணவு பணவீக்கம் ஜூலை 2022ல் 6.75% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 7.75% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இனி வரும் மாதங்களில் இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

WFH-ல் இவ்வளவு நன்மை இருக்கா.. பெங்களூரின் எதிர்காலம் இப்படி தான் இருக்குமா?

தொடர்ச்சியாக 7% மேல்

தொடர்ச்சியாக 7% மேல்

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் தொடர்ந்து 7% மேலாக இருந்து வருகின்றது.

இதே ஜூன் மாதத்தில் ஐஐபி தரவானது 12.3% ஆக வளர்ச்சி கண்டு உள்ளது. இதே மே மாதத்தில் 19.6% ஆக இருந்தது. இதே கொரோனா காலத்தில் தொழிற்துறையில் வளர்ச்சி விகிதமானது 18.7% மார்ச் 20220ல் இருந்து சரிவினைக் கண்டிருந்தது.

மற்ற துறைகள் நிலவரம்

மற்ற துறைகள் நிலவரம்

உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதமானது ஜூன் 2022ல் 12.5% ஆக வளர்ந்தது. இதே சுரங்கத் துறை 7.5% ஆகவும், மின்சார துறையில் வளர்ச்சி விகிதமானது 16.4% ஆகவும் அதிகரித்துள்ளது.

தொழில் துறை உற்பத்தி
 

தொழில் துறை உற்பத்தி

கடந்த ஆண்டில் தொழில்துறை உற்பத்தி குறித்தான தரவு 13.8% ஆக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே ஏப்ரல் – ஜூன் 2022ல் 12.7% ஆக ஏற்றம் கண்டிருந்தது. இது கடந்த ஆண்டில் 44.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுனால் சரிவு

லாக்டவுனால் சரிவு

ஏப்ரல் 2020ல் தொழில் துறை உற்பத்தி 57.3% ஆக சரிவினைக் கண்டுள்ளது. இது நாடு தழுவிய அளவில் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், வளர்ச்சி விகிதமானது முற்றிலும் சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

வட்டி அதிகரிக்கும்

வட்டி அதிகரிக்கும்

2023ம் ஆண்டில் பணவீக்கம் போதுமான அளவு குறையலாம். இதற்கிடையில் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

retail inflation eases to 6.71% in july amid food prices cool

retail inflation eases to 6.71% in july amid food prices cool/ஹேப்பி நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 6.71% ஆக சரிவு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.