காதலனின் துரோகத்தை அம்பலப்படுத்த முழுபக்க விளம்பரம்… யாருடைய செலவில் தெரியுமா?

ஒரு காதலன் தனது காதலியை ஏமாற்றி விட்டால் காதலி, காதலனை பழிவாங்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளார் என்பது குறித்த செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

அந்த வகையில் குயின்ஸ்லாந்து நாட்டில் உள்ள நகரம் ஒன்றில் காதலன் ஒருவனால் ஏமாற்றப்பட்ட காதலி, பிரபல பத்திரிகை ஒன்றில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த விளம்பரத்திற்கு காதலனின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 வயதில் 3 ஆப்… கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

காதலனின் துரோகம்

காதலனின் துரோகம்

குயின்ஸ்லாந்து நாட்டில் உள்ள மேக்கே என்ற நகரில் ஸ்டீவ்- ஜென்னி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக இருந்தனர். இந்த நிலையில் திடீரென தனது காதலி ஜென்னியை ஸ்டீவ் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜென்னி மற்ற பெண்களை போல் மூலையில் முடங்கி கிடக்காமல் தனது காதலனின் துரோகத்தை ஊருக்கு அமல்படுத்த முடிவு செய்தார்.

முழுபக்க விளம்பரம்

முழுபக்க விளம்பரம்

இதனை அடுத்து ஜென்னி உள்ளூரில் வெளிவரும் Mackay and Whitsunday Life என்ற செய்தித்தாளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். அதில் அன்புள்ள ஸ்டீல் என்று ஆரம்பித்து நீ என்னுடன் மகிழ்ச்சியாக ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை இந்த முழு நகரமும் அறிந்து கொண்டது’ என அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் கீழே பின்குறிப்பில், இந்த விளம்பரத்திற்காக காதலனின் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்
 

பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்

Mackay and Whitsunday Life என்ற பத்திரிகையின் நான்காவது பக்கத்தில் இந்த முழுபக்க விளம்பரம் வந்ததை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த ஸ்டீவ்? ஏமாற்றப்பட்ட ஜென்னி யார்? என பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர்.

செய்தித்தாள் நிறுவனம் விளக்கம்

செய்தித்தாள் நிறுவனம் விளக்கம்

இதுகுறித்து செய்தித்தாள் நிறுவனம் தனது பேஸ்புக்கில் விளக்கத்தை அளித்துள்ளது. அதில் செய்தித்தாள் விளம்பரத்தில் கூறியபடி எந்தவித கிரெடிட் கார்டில் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் விளம்பரம் கொடுத்த ஜென்னி குறித்த விவரங்களை தெரிவிக்க முடியாது என்றும், அதேபோல் விளம்பரத்தில் உள்ள ஸ்டீவ் யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் ஆனால் அவர் மோசமானவர் என்று விளம்பரத்திலிருந்து தெரியவந்ததாகவும் பதிவு செய்துள்ளது.

காதலனின் கிரெடிட் கார்டு

காதலனின் கிரெடிட் கார்டு

மேலும் ஜென்னி பற்றிய விபரங்களை பலர் செய்தித்தாள் நிறுவனத்தில் கேட்டபோதிலும் ஜென்னி குறித்த எந்த விவரத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும் ஆனால் அவர் குறிப்பிட்டபடி அவருடைய காதலனின் கிரெடிட் கார்டு மூலம் நாங்கள் பணம் வசூலிக்கவில்லை என்பதை மட்டும் தெளிவு படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.

நெட்டிசன்கள் பாராட்டு

நெட்டிசன்கள் பாராட்டு

ஜென்னி தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க எடுத்த இந்த வித்தியாசமான முயற்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் ஜென்னியின் துணிச்சலான முடிவை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலர் இது ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை என்றும் விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Woman give full-page newspaper ad to call out ‘filthy cheater’ boyfriend

Woman give full-page newspaper ad to call out ‘filthy cheater’ boyfriend | காதலனின் துரோகத்தை அம்பலப்படுத்த முழுபக்க விளம்பரம்… யாருடைய செலவில் தெரியுமா?

Story first published: Saturday, August 13, 2022, 10:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.