ரஜினிகாந்த்தின் திடீர் தேசப்பற்று..!- வீட்டில் ஏற்றப்பட்ட தேசிய கொடி..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன் தேசியக் கொடி ஏற்றப்பட்டது விவாதப்பொருள் ஆகியுள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றும் படியும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராக தேசியக் கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தின் புரொஃபைல் பிக்சராக மூவர்ண கொடியை மாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது அவரது வீட்டின் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அரசியல் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் கன்டென்ட் கொடுப்பவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 25 ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தமிழகம் பேசி வந்த நிலையில், திடீரென்று தனது அரசியல் கனவுக்கு முழுக்கு கொடுக்கும் விதமாக தனது உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் ரஜினிகாந்த் .

அதன் பிறகு அரசியலில் அவர் பெரிதாக ஒன்றும் ஈடுபாடு காட்டவில்லை . இருந்தபோதிலும் சில காலம் அரசியல் விவகாரங்களில் அடக்கியே வாசித்தார் ரஜினிகாந்த். அவ்வப்போது தனது புதிய படங்கள் வெளியாகும்போது மட்டும் திடீர் என்று சில மேடைகளில் அவர் பேசாவிட்டாலும் அவரைச்சார்ந்தோர் அரசியல் பேசி தமிழக அரசியல் களத்தை அனல் பறக்க விடுவார்கள்.

இந்தச்சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.ஏன்.ரவியின் அழைப்பின் பெயரில் ரஜினியுடன் சந்திப்பு நடைபெற்றது. ஆளுனரை சந்தித்து விட்டு செய்தியாளர்களை வழக்கமாக தனது போயஸ் கார்டன் வீட்டின் முன்பு சந்தித்த ரஜினிகாந்த் “நானும் ஆளுநரும் அரசியல் பேசினோம், ஆனால் அதை வெளிய சொல்ல முடியாது” என்றது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. பல அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது வீட்டின் முன்பாக தேசிய கொடியை ஏற்றியதோடு அரசியல் களத்தில் சூடும் ஏற்றி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தனது வீட்டின் முன்பாக தேசிய கொடி பறப்பது போன்ற படம் சமூக வலைதளங்களில் பரவி, கொடி பறப்பதை போலவே அரசியல் அரங்கில் நெடியும் பரகத் தொடங்கியது.

இந்த கொடி விவகாரத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்று மட்டும் தானா அல்லது மீண்டும் அரசியல் பிரவேசதிற்கான சிக்னலா என்பதை பொறுத்து இருந்து பார்த்தால் புரியும்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.