பெங்களூரு : “லஞ்ச ஒழிப்பு படையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் லோக் ஆயுக்தாவுக்கு மீண்டும் பலம் வந்துள்ளது,” என முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார்.இது குறித்து பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:லஞ்ச ஒழிப்பு படையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, அருமையான முடிவு. இதனால் லோக் ஆயுக்தாவுக்கு பலம் வந்துள்ளது; ஊழல்வாதிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.அரசு முழுமையாக ஒத்துழைத்தால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடியும். எந்த ஒரு நேர்மையான அரசும் இந்த தீர்ப்பை ஏற்று கொள்ளும்.மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் மனித வளத்தை அதிகரித்து லோக் ஆயுக்தாவை பலப்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் நியமனத்தில் லோக் ஆயுக்தாவுக்கே முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.பொது சேவையில் இருப்போரின் ஊழல் வழக்குகளை லோக்ஆயுக்தா விசாரிக்கிறது. இதனால் இந்த அமைப்பை பலவீனப்படுத்த அரசியல்வாதிகள் உள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். லஞ்ச ஒழிப்பு படை என்பதே ஒரு நாடகம். கடந்த ஆண்டில் இந்த அமைப்பு இதுவரை ஒரு அமைச்சர், ஐ.ஏ.எஸ்.,அதிகாரியிடம் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement