ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும்: செய்தியாளர் சந்திப்பில் சையது கான் அதிரடி

தேனி: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும், இனிமேலும் அவர் பணத்தாசை பிடித்த எடப்பாடி பழனிச்சாமியை பொருட்படுத்தக்கூடாது என்று செய்தியாளர்களிடம் பேசிய சையது கான் தெரிவித்தார். பதவி ஆசையால், சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று ஓபிஎஸ்ஸுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்று அவரை கடுமையாக சாடினார்.

செங்கோட்டையன் தான் முதன் முதலில் சசிகலாவினால் அதிமுக சார்பில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அதனை செங்கோட்டையன் ஏற்காததினால் எடப்பாடி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது கட்சியில் அனைவருக்கும் தெரியும் என்று குட்டிய சையத் கான், அதிமுகவில் கட்சியில் இணைந்துபணியாற்ற நாங்கள் ரெடி என்று தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை பசுத்தோல் போற்றிய புலி எனக் கூறிய ராஜன் செல்லப்பா, பல கட்சி மாறியவர் கட்சிக்கு துரோகம் செய்தவர். ஓபிஎஸ் இனிமேல் புலியாக மாற வேண்டும் என ஓபிஎஸ்யின் பண்ணை வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்தார்.

அதிமுகவின் கட்சி முதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு தற்போது வெளியான நிலையில் தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ் அதிமுகவினர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இனி மேலாவது, கசப்பு உணர்வுகளை மறந்து கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டுமென ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டம் ஆன தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஓபிஎஸின்  பண்ணை வீட்டில் ஓபிஎஸ் இன் ஆலோசனையின் பெயரில் செய்தியாளர்களை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் இவ்வாறு தெரிவித்தார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.